புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் திருச்சியில் 4ம் தேதி நடத்துகிறது ஜி.விஸ்வநாதன் மருத்துவமனை
திருச்சி டாக்டர் ஜி. விஸ்வநாதன் மருத்துவ மனை சேர்மன் டாக்டர் கோவிந்தராஜ் நிருபர்களிடம் தெரிவித்ததாவது. சாந்தா மார்பக புற்று நோய் அறக்கட்டளை மற் றும் டாக்டர் ஜி.விஸ்வ நாதன் மருத்துவமனை சார்பில் மேம்மோரன்-2026 எனும் விழிப்புணர்வு ஓட்டம் திருச்சியில் அக்டோபர் 4ம் தேதி நடக்கிறது. 21.1 கி.மீ அரை மாரத்தான் ஓட்டத்தை காலை 5மணிக்கு மாம்பழச் சாலை டாக்டர் ஜி.விஸ் வநாதன் மருத்துவமனை யிலிருந்து ஸ்ரீரங்கம் போலீஸ் துணை கமிஷனர் சீதாராமன்,5. கி.மீ. ஓட்டத்தை உழவர் சந்தையில் காலை 7 மணிக்கு மத்திய மண்டல போலீஸ் ஐஜி பாலகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர். போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு ஜமால் முகமது கல்லுாரியில் காலை 8.30 மணிக்கு பரிசு வழங்கப்படுகிறது. பரிசளிப்பு விழாவில் கல்லுாரி தாளாளர் காஜா நஜூமுதின், நடிகை ப்ரீத்தா முகுந்த் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
1995ம் ஆண்டு சாந்தர் மார்பக புற்றுநோய் அறக்கட்டளை தொடங்கப்பட்டது. ஸ்ரீரங்கம் ரோட்டரி கிளப் வழங்கிய முழு மருத்துவ வசதி கொண்ட 'மேமோ பஸ்' மூலம் திருச்சி மற்றும் சுற்றுப் புறத்தை சேர்ந்த 4 லட்சம் மக்களுக்கு மார்பக புற்று நோய் குறித்த விழிப்பு ணர்வு மற்றும் 41 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
சாந்தா புற்றுநோய் அறக்கட்டளை சார்பில் முடிதானம், பட்டிமன்றம், மார்பக புற்றுநோயிலிருந்து குணமடைந்தவர்களுக் கான நிகழ்ச்சிகள் நடத் தப்படுகிறது. என்றார்.
நிகழ்ச்சியில் காது மூக்கு தொண்டை நிபுணர் ஜவஹர் நாகசுந்தரம், புற் றுநோய் சிகிச்சை நிபுணர் சீனிவாசன், ஒருங்கிணைப் பாளர் விஜயலட்சுமி உட் பட பலர் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0