திருச்சி மாவட்ட பள்ளி மாணவ–மாணவிகளுக்கான ஓவியப்போட்டி ரூ50,000 மதிப்பிலான பணப்பரிசுகள்

 0
திருச்சி மாவட்ட பள்ளி மாணவ–மாணவிகளுக்கான ஓவியப்போட்டி  ரூ50,000 மதிப்பிலான பணப்பரிசுகள்

திருச்சி டிசைன் ஓவியப்பள்ளியின் 16ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு, டிசைன் ஓவியப்பள்ளி மற்றும் போத்தீஸ் நிறுவனம் இணைந்து பள்ளி மாணவ–மாணவிகளுக்கான ஓவியப்போட்டியை  திருச்சி ரம்யாஸ் ஹோட்டல் சௌபாக்யா குளிர்மை அரங்கில் செப்டம்பர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் மதியம் 12 மணி முதல் மாலை 5 மணி வரை ஓவிய போட்டிகள் நடைபெறுகின்றன.

ஓவிய போட்டி நான்கு பிரிவுகளாக நடைபெறுகிறது. LKG மற்றும் UKG மாணவர்களுக்கு வண்ணம் தீட்டும் போட்டியும், 1 முதல் 3ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ‘பொம்மை உலகம் கற்பனைக் காட்சி’ என்ற தலைப்பிலும், 4 முதல் 6ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ‘மாயாஜாலக் காடுகள்’ என்ற தலைப்பிலும், 7 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ‘மனிதனும் எந்திர உலகமும்’ என்ற தலைப்பிலும் ஓவியப்போட்டி நடைபெறுகிறது.

நான்கு பிரிவுகளுக்கும் சேர்த்து மொத்தம் ₹50,000 மதிப்பிலான பணப்பரிசுகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகள் வழங்கப்படும். போட்டியில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா செப்டம்பர் 28ஆம் தேதி திங்கட்கிழமை மாலை நடைபெறுகிறது.

இவ்விழாவில் சென்னையைச் சேர்ந்த ஓவியர் மியூசியம் மேன் ஆஃப் இந்தியா ஏ.பி.ஸ்ரீதர்,  திரைப்படப் பாடலாசிரியர், பாவலர் அறிவுமதி, தமிழ்ச்சுடர் தாமல் கோ. சரவணன் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு மாணவர்களைப் பாராட்டி பரிசுகளை வழங்குகின்றனர். பள்ளி மாணவர்களின் கற்பனைத் திறன், படைப்பாற்றல் மற்றும் ஓவியத் திறமையை வெளிப்படுத்தும் வகையில் நடைபெறும் இப்போட்டியில் அனைத்து பள்ளி மாணவ–மாணவிகளும் பங்கேற்கலாம்.

அனுமதி இலவசம்.

ஓவிய போட்டிக்கான ஏற்பாடுகளை டிசைன் ஓவியப்பள்ளி தாளாளர் மதன் மற்றும் முதல்வர் திருமதி நஸ்ரத் பேகம் ஆகியோர் செய்து வருகின்றனர்.

மேலும் தொடர்புக்கு:

90039 69566 +91 431 355 2424

What's Your Reaction?

Like Like 7
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0