திருச்சி பி.எச்.இ.எல். முத்தமிழ் மன்ற முப்பெரும் விழா
திருச்சி பி.எச்.இ.எல் வளாகத்தில் இயங்கி வரும் முத்தமிழ் மன்றம் சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாள் விழா, வாழும் வள்ளுவம் பொன்விழா வாரம், கருத்தரங்கம் மற்றும் பரிசளிப்பு விழா ஆகிய முப்பெரும் விழா மனமகிழ் மன்ற உள்ளரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு முத்தமிழ் மன்ற தலைவரும், பெல் பொதுமேலாளருமான சமுத்திர பாண்டி தலைமை தாங்கினார். முத்தமிழ் மன்ற பொதுச் செயலாளர் அமிர்த செயபால் வரவேற்று பேசினார். கருத்தரங்கில் பன்முகப் பேராளுமை முத்துநிலவன் கலந்து கொண்டு, “திருவள்ளுவர் குறள்நெறியில் வாழ்ந்து காட்டிய பேரறிஞர் அண்ணா” என்ற தலைப்பில் கருத்துரை ஆற்றினார்.
விழாவில் மூத்த ஆலோசகர் துரைராஜ், வாழும் வள்ளுவம் ஒருங்கிணைப்பாளர்கள் காளிராஜ், பாக்கியராஜ் மற்றும் முத்தமிழ் மன்ற நிர்வாகிகள், உறுப்பினர்கள், பெல் தொழிலாளர்கள், பள்ளி மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர் நிறைவாக முத்தமிழ் மன்ற செயலாளர் கருப்பசாமி நன்றி கூறினார்.
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0