33 வது வார்டில் செங்குளம் காலினியில் குடிநீருடன் சாக்கடை நீர் கலப்பு : திருச்சியில் பொதுமக்களுடன் அதிமுகவினர் சாலை மறியல் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை

 0
33 வது வார்டில் செங்குளம் காலினியில் குடிநீருடன் சாக்கடை நீர் கலப்பு :    திருச்சியில் பொதுமக்களுடன் அதிமுகவினர் சாலை மறியல்  மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை

திருச்சி மாநகராட்சி 33வது வார்டில் செங்குளம் காலனி உள்ளது இந்த குடியிருப்பில் சுமார் 15க்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்பில் சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து செங்குளம் காலனியில் மாநகராட்சி குடிநீர் குழாயில் குடிநீருடன் சாக்கடை நீர் கலந்து வருகிறது. இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் அப்பகுதி பொதுமக்கள் புகார் கூறியும், அதிகாரிகள் சரிவர நடவடிக்கை எடுக்காமல் இழுத்து அடித்து வந்தனர். மேலும் செங்குளம் காலனி பகுதியில் கடந்த சில வார காலமாக தொடர்ந்து குப்பைகள் மற்றும் சாக்கடை நீர் அகற்றப்படாமல் தேங்கி கிடக்கிறது. இதனால் அங்கு சுகாதாரமற்ற சூழ்நிலை நிலவுகிறது. மேலும்அங்கு வசிக்கும் மக்களுக்கு இதனால் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.இதனையும் சரி செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தும் மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியமாக இருந்து வந்ததாக தெரிகிறது.இதை எடுத்து இன்று அப்பகுதியை சேர்ந்த அதிமுகவினர் திருச்சி மாநகராட்சி அதிமுக மாநகராட்சி கொறடா கவுன்சிலர் அரவிந்தனிடம் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து அதிமுக கவுன்சிலர் அரவிந்தன் தலைமையில் அப்பகுதி அதிமுகவினர் ஏராளமானவர்கள் செங்குளம் காலனியில்

கூடி அங்குள்ள அவலநிலைகளை பார்வையிட்டுக் கொண்டு இருந்தனர். அப்பொழுது சம்பவ இடத்திற்கு மாநகராட்சி அதிகாரிகளுக்கு வருமாறு தகவல் தெரிவித்து அழைப்பு விடுத்தனர். ஆனால் அதிகாரிகள் வராமல் அலட்சியம் காட்டி வந்தனர். இதனால் ஆத்திரமடைந்த அதிமுகவினர் 50 பேர் மற்றும் செங்குளம் காலனி பொதுமக்கள் திடீரென்று பாலக்கரை மெயின் ரோட்டில் ரெட்டை பிள்ளையார் கோவில் அருகில் திரண்டு வந்து அதிமுக கவுன்சிலர் அரவிந்தன் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து பாலக்கரை போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து குடிநீர் மற்றும் சுகாதார பிரச்சனையை சரி செய்து தருவதாக உறுதி அளித்ததை தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தைஅதிமுகவினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கைவிட்டுகலைந்து சென்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0