திருச்சி மாநகரில் பிஜி நாயுடு ஸ்வீட்ஸ் 3 புதிய கிளைகள் திறப்பு
பாரம்பரிய இனிப்பு வகைகளிலிருந்து இன்றைய காலகட்டத்தில் புதிதாக ட்ரெண்டிங்கில் உள்ள ஸ்வீட்ஸ்கள் வரை கிடைக்கும் என்கிற பெயரையும் நன்மதிப்பையும் பிஜி நாயுடு தொடர்ந்து பெற்று வருகிறது. அந்த வகையில் வாடிக்கையாளர்களின் ஆதரவோடு பிஜி நாயுடு ஸ்வீட்ஸ் மூன்று புதிய கிளைகளை ஞாயிற்றுக்கிழமை திருச்சி மாநகரில் திறந்துள்ளது. திருச்சி தினத்தந்தி அலுவலகம் எதிரில் 53 வது கிளையையும், குண்டூர் மொரைய்ஸ் சிட்டி நுழைவுவாயில் அருகே 54வது ஷோரூமையும், சத்திரம் பேருந்து நிலையம் மெஜஸ்டிக் மகாராஜா முன்பாக தனது 55 ஆவது ஷோரூமையும் பிஜி நாயுடு குழுமம் தொடங்கியுள்ளது.இதில் திருச்சி ஜங்ஷன் பகுதியில் திருச்சி மண்டல வர்த்தக பிரிவு மேலாளர் வெங்கட்ராகவன் கலந்து கொண்டு புதிய பி.ஜி நாயுடு ஷோரூம்களை திறந்து வைத்தார்.
இதில் திருச்சி மேலாளர் பிள்ளைகனி மற்றும் பலர் கலந்து கொண்டு குத்து விளக்கை ஏற்றினர். திறப்பு விழா நிகழ்ச்சிக்கு மேலாண்மை இயக்குனர்கள் பாலாஜி, நிர்வாக இயக்குனர் அமர்நாத், நிர்வாக இயக்குனர்கள் சார்நாத், வினோத் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். பி.ஜி நாயுடு ஸ்வீட்ஸ் திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், பெரம்பலூர், காரைக்குடி, பட்டுக்கோட்டை, மதுரை ஆகிய ஊர்களில் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த முறையில் ஸ்வீட் மற்றும் காரம் உள்ளிட்ட பலகாரங்களை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
இங்கு 650 வகையான ஸ்வீட்டுகள் மற்றும் 50க்கும் மேற்பட்ட கார வகைகள் விற்பனை செய்யப்படுகிறது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0