11 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் உள்ள சேவை கட்டணத்தை உயர்த்த வேண்டும் தமிழ்நாடு இ சேவை மைய உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்

 0
11 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் உள்ள  சேவை கட்டணத்தை உயர்த்த வேண்டும்  தமிழ்நாடு இ சேவை மைய உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்

தமிழ்நாடு இ-சேவை மைய உரிமையாளர்கள் சங்க கூட்டம் மற்றும் உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கும் கூட்டம் திருச்சியில் உள்ள தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளி அரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் மூர்த்தி தலைமை தாங்கினார். செயலாளர் சேவியர் முன்னிலை வகித்தார். பொருளாளர் சரவணகுமார், துணைத் தலைவர்கள் ஜெயபிரகாஷ், அருள்செல்வம், கோபி, இணை செயலாளர்கள் லோகநாதன், சுரேஷ், கரோலினாள் மற்றும் 350க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் டிஜிட்டல் சேவா போர்ட்டலில் இ-சேவை அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதால், இ-சேவைப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் உள்ள எங்கள் சங்கத்தைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு, புதிய இ-சேவை ஐடிகளை வழங்க வேண்டும். கடந்த 11 ஆண்டுகளுக்கும் மேலாக உயர்த்தப்படாமல் உள்ள சேவைக் கட்டணத்தை குறைந்தபட்சம் ரூ.150 ஆகவும், வாரிசுச் சான்றிதழ் விண்ணப்பக் கட்டணத்தை ரூ.250 ஆகவும், பட்டா விண்ணப்பக் கட்டணத்தை ரூ.350 ஆகவும் உயர்த்த வேண்டும். இ-சேவை மையங்களுக்கு மின் கட்டணத்தில் மானியம் வழங்க வேண்டும். இ-சேவை மைய உரிமையாளர்களுக்குத் தனியாக நலவாரியம் அமைக்க வேண்டும். குடும்ப அட்டையில் புகைப்படம் மாற்றுதல், பெயர் திருத்தம் மற்றும் ஸ்மார்ட் குடும்ப அட்டை அச்சிடுதல் உள்ளிட்ட சேவைகளை இ-சேவை மையங்கள் மூலம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிறப்புச் சான்றிதழ்களில் திருத்தம் செய்வதற்கான விண்ணப்பங்களை இணையவழியில் சமர்ப்பிக்கும் வசதியை ஏற்படுத்த வேண்டும்.5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் பதிவு செய்வதற்கான அங்கீகாரத்தை வழங்க வேண்டும்.ஆதார் அட்டையில் பெயர், பிறந்த தேதி, கைப்பேசி எண், முகவரி உள்ளிட்ட விவரங்களை மாற்றுவதற்கான அங்கீகாரத்தை வழங்க வேண்டும்.ஆதார் அட்டையில் பயோமெட்ரிக் விவரங்களைப் புதுப்பிக்கும் பணிகளைத் தகுதியான இ-சேவை மையங்களுக்கு வழங்க வேண்டும்என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

What's Your Reaction?

Like Like 2
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0