தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கம் திருச்சி - கரூர் மண்டலம் சார்பில் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
தமிழக வெற்றிப்பயண பேருந்துகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தினப்படி மற்றும் வசூல் படியினை உயர்த்தி வழங்க வேண்டும்.
போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றோர், இயற்கை எய்திய தொழிலாளர்களுக்கு ஓய்வு கால பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும்
தினந்தோறும் டீசல் செலவை ஈடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போக்குவரத்துக்கழக பேருந்துகளின் பராமரிப்பை மேம்படுத்திடவும்
பேருந்துகளின் டயர் மற்றும் உதிரிபாகங்கள் வழங்க நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்பது உள்பட 22 கோரிக்கைகளை வலியுறுத்தி
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கம் திருச்சி - கரூர் மண்டலம் சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள தலைமை அரசு போக்குவரத்து கழகம் முன்பு தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் போக்குவரத்துக் கழக தொ.மு.ச மண்டலச் செயலாளர் பி.குணசேரன் தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் டி. சேகர்,எஸ்.அப்பாவு, கனகசபை உள்பட அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் ஏராளமான பேர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0