​பணி நிரந்தரம், ஊதிய உயர்வு கோரி பள்ளிக் கல்வித்துறை ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

 0
​பணி நிரந்தரம், ஊதிய உயர்வு கோரி பள்ளிக் கல்வித்துறை ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறையில், அட்மினிஸ்ட்ரேட்டிவ் கம் இன்ஸ்ட்ரக்டர் (ஏ.சி.ஐ) பணியிடங்களை வெளிமுகமை முறையில் நிரப்புவதைக் கைவிட்டு, தமிழ்நாடு அரசே தங்களை நேரடியாக ஏற்றுக்கொண்டு பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். தற்போது 11 மாதங்கள் மட்டுமே வழங்கப்பட்டு வரும் பணியை, 12 மாத முழுநேரப் பணியாக வழங்க வேண்டும். மாதம் 9,700 ரூபாய் மட்டுமே ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. தற்போதைய விலைவாசி உயர்விற்கு ஏற்ப நியாயமான ஊதிய உயர்வு வழங்க வேண்டும். டெண்டர், ஒப்பந்த விவரங்கள் மற்றும் தொழில் வரி பிடித்தம் குறித்து தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும். ஏ.சி.ஐ ஊழியர்களை எமிஸ் இணையதளத்தில் மீண்டும் சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு டிஜிட்டல் கல்விப் பணியாளர்கள் நலச் சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்குச் சங்கச் செயலாளர் இலக்கியா தலைமை தாங்கினார். போராட்டத்தின் கோரிக்கைகளை விளக்கிச் சங்கத் தலைவர் செந்தில்நாதன், துணைத் தலைவர் தாஜ் நிஷா ஆகியோர் பேசினர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0