பிஎச்இஎல் முத்தமிழ் மன்றம் சார்பில் வாழும் வள்ளுவம் 50-ஆவது பொன்விழா வார தொடர் நிகழ்ச்சி
திருச்சி பிஎச்இஎல் முத்தமிழ் மன்றத்தின் சார்பில், ‘வாழும் வள்ளுவம்’ என்ற தலைப்பில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் தொடர் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் 50-ஆவது பொன்விழா வாரத் தொடர் நிகழ்ச்சியையொட்டி, பள்ளி மாணாக்கர்களுக்குப் பல்வேறு தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் 3-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கான திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, திருவள்ளுவர் வேடமிட்டு திருக்குறள் கூறும் மாறுவேடப் போட்டி மற்றும் திருக்குறளை மையமாகக் கொண்ட நாடகப் போட்டிகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இதன் ஒருபகுதியாக, கடந்த 30 -ந் தேதி அன்று திருக்குறள் மாறுவேடப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் திரளான குழந்தைகள் கலந்துகொண்டு திருவள்ளுவர் வேடமிட்டு திருக்குறள்களைக் கூறினர். இந்நிகழ்ச்சிக்கு முத்தமிழ் மன்றத்தின் தலைவரும், பிஎச்இஎல் பொது மேலாளருமான பெ.சமுத்திரபாண்டி தலைமை தாங்கினார். முத்தமிழ் மன்றப் பொதுச்செயலாளர் தா.அமிர்த ஜெயபால் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். விழாவில் முத்தமிழ் மன்ற நிர்வாகிகள், உறுப்பினர்கள், தொழிலாளர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர். நிறைவாக, முத்தமிழ் மன்ற அமைப்புச் செயலாளர் பாக்கியராஜ் நன்றி கூறினார்.வரும் 6-ந்தேதி நடைபெற உள்ள கருத்தரங்கம் மற்றும் பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழறிஞர் நா. முத்துநிலவன் கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
1
Funny
0
Angry
0
Sad
0
Wow
0