சுற்றுச்சூழலை பாதுகாக்க பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் தன்னார்வ அமைப்பினர் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம்

 0
சுற்றுச்சூழலை பாதுகாக்க பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் தன்னார்வ அமைப்பினர் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம்

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன், ரோட்டரி கிளப் ஆப் திருச்சி டைனமிக் மற்றும் பவுண்டேஷன் பார் நேச்சுரல் ரிசோர்சஸ் அண்டு சஸ்டைனபிலிட்டி (எஃப்ஓஎன்எஸ்) அறக்கட்டளை இணைந்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் பல்வேறு சேவைத் திட்டங்களை முன்னெடுப்பதற்காக இரண்டு ஆண்டுகால புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. நிகழ்வில் ரோட்டரி கிளப் ஆப் திருச்சி டைனமிக் தலைவர் மற்றும் நேச்சுரல் ரிசோர்சஸ் அண்டு சஸ்டைனபிலிட்டி டிரஸ்டி இன்ஜினியர் பி. ராஜ்மோகன், பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் குழு உறுப்பினர் டாக்டர் வி. ராஜேஷ் கண்ணன், பல்கலைக்கழகப் பதிவாளர் (பொறுப்பு) ஆர். காளிதாசன், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் பி. ஜெயப்பிரகாஷ், சி ஜி ஐ ஒருங்கிணைப்பாளர் எஸ். ராஜகுமார் , சிண்டிகேட் உறுப்பினர் எம். சுருளிநாதி மற்றும் எப் ஒ என் எஸ் அறக்கட்டளைப் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த ஒப்பந்தத்தின் மூலம் இயற்கை வளங்களைப் பாதுகாத்தல், பசுமைச் சூழலை மேம்படுத்துதல், சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு சுற்றுச்சூழல் சார்ந்த சேவைத் திட்டங்களை ஒருங்கிணைந்து செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

கல்வி நிறுவனங்களும் சமூக சேவை அமைப்புகளும் இணைந்து செயல்படுவதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் நீண்டகால மாற்றத்தை உருவாக்கி, நிலையான பசுமையான எதிர்காலத்தை உருவாக்குவதே இக்கூட்டாண்மையின் நோக்கமாகும்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0