நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சிகளில் காலியாக உள்ள ஓட்டுனர் பணியிடங்களை நிரப்பிட வேண்டும் மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்

 0
நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சிகளில் காலியாக உள்ள ஓட்டுனர் பணியிடங்களை நிரப்பிட வேண்டும் மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்

தமிழ்நாடு அரசு நகராட்சிகள், மாநகராட்சிகள், பேரூராட்சிகள் ஓட்டுநர்கள் மற்றும் துலக்குனர்கள் சங்க மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் திருச்சி அருண் ஓட்டலில் இன்று நடந்தது மாநில செயலாளர் பா. தெட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் கள்ளக்குறிச்சி கே. செந்தில், மாநில ஒருங்கிணைப்பாளர் ஆற்காடு ராஜா, மாநில தலைமை நிலைய செயலாளர் கும்பகோணம் ஈஸ்டர் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் கோ. ஏழுமலை, மாநில பொதுச் செயலாளர் கே.ஆர். தங்கவேலு, மாநிலச் செயலாளர் கே. திருப்பதி ஆகியோர் கூட்டத்தை தொடங்கி வைத்தனர் .தமிழ்நாடு அரசு ஊர்தி ஓட்டுனர் சங்க மாநிலத் தலைவர் (தொழில் வணிகத்துறை) பச்சையப்பன், மாநில பொதுச் செயலாளர்(

தேசிய நெடுஞ்சாலைத்துறை)  கே. குமார், மாநில பொருளாளர்(ஊரக வளர்ச்சித் துறை) பை.முருகன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு பேசினர். முன்னதாக மாநில முதன்மை செயலாளர் முகமது அலி, கொள்கை பரப்புச் செயலாளர் கோபால், மாநில துணைத்தலைவர் கருணாநிதி, மாநில அமைப்பாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் வரவேற்றனர் முடிவில் மாநில செயல் தலைவர் ராஜமாணிக்கம் நன்றி கூறினார் இந்த கூட்டத்தில், அரசாணை 152 /10 விதிகளின்படி ஓட்டுனர்கள் பணிநீக்கம் செய்யப்படும் உத்தரவின் விதிகளை தளர்த்தி மீண்டும் ஓட்டுனர் பணியை தொடர வழிவகை செய்ய வேண்டும். நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி, பேரூராட்சிகளில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும். முன்பு இருந்தது போல நகராட்சிகளில் 15 ஓட்டுநர்களும், மாநகராட்சிகளில் 35 ஓட்டுநர்களும் நிரந்தரமாக பணி அமர்த்திட வேண்டும்.அரசு ஊர்தி ஓட்டுநர்களுக்கு அவரவர் கல்வி தகுதிகளுக்கு ஏற்ப வாகன ஆய்வாளர், ஸ்கில்டு அசிஸ்டன்ட் , போர் மேன் போன்ற பதவி உயர்வு வழங்க வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைந்து, 20 ஆண்டுகள் பணி முடிந்த ஓட்டுநர்களுக்கு வழங்கப்படும் நான்கு கிராம் தங்கத்தை 8 கிராம் தங்கமாக உயர்த்தி வழங்கிட வேண்டும் 

என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0