திருவெறும்பூரில் மத நல்லிணக்கத்தை வலுப்படுத்திய பள்ளிவாசல் ஜமாஅத்தின் மனிதநேயப் பணி
திருச்சி திருவெறும்பூர் காந்திநகரில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவிலின் 63-ஆம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பால்குட ஊர்வலத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு, அப்பகுதி பள்ளிவாசல் ஜமாஅத் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜமாஅத் தலைவர் தீன் அவர்கள் தலைமையில், பால்குடம் எடுத்துச் சென்ற பக்தர்கள் பயணித்த சாலைகளில் தண்ணீர் தெளிக்கப்பட்டது. மேலும், வெயிலில் ஊர்வலமாக வந்த பக்தர்களுக்கு நீர், மோர் மற்றும் குடிநீர் வழங்கி அன்புடன் உபசரிக்கப்பட்டது. பள்ளிவாசல் ஜமாஅத்தின் இந்த மனிதநேயப் பணி, அப்பகுதி மக்களிடையே மத நல்லிணக்கம், சகோதரத்துவம் மற்றும் சமூக ஒற்றுமையை மேலும் வலுப்படுத்தும் நிகழ்வாக அமைந்தது. பொதுமக்கள் இந்தச் செயலை வெகுவாக பாராட்டினர்.
இந்நிகழ்வில் பள்ளிவாசல் ஜமாஅத் நிர்வாகிகள் நிஜாம், கோவில் விழா நிர்வாகிகள் பா. லெனின் மற்றும் உள்ளூர் முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0