திருச்சி கிழக்கு தொகுதியில் இரட்டை இலை மலரும்: திருச்சி மாநகர், புறநகர் மாவட்ட அம்மா பேரவை நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேச்சு ​

 0
திருச்சி கிழக்கு தொகுதியில் இரட்டை இலை மலரும்:   திருச்சி மாநகர், புறநகர் மாவட்ட அம்மா பேரவை நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேச்சு   ​

திருச்சி மாவட்ட அஇஅதிமுக மற்றும் அம்மா பேரவை சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் உணவகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அம்மா பேரவை மாநிலச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் மாநில அமைப்புச் செயலாளர் ரத்தினவேல், திருச்சி மாவட்டச் செயலாளர்கள் மனோகரன், கார்த்திகேயன், யோகநாதன், ப.சீ. சிவகுமார், மகளிரணி இணைச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான லீமாரோஸ் மார்ட்டின் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.கூட்டத்தில் அம்மா பேரவை மாநிலச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது: திருச்சி கிழக்குத் தொகுதியில் இரட்டை இலை மலரும் அதிமுகவிற்கு வெற்றி என்பது புதிதல்ல. தொண்டர்களும் பொதுமக்களும் இணைந்து எடப்பாடி கே. பழனிசாமியை மீண்டும் முதலமைச்சராக ஆட்சியில் அமர வைக்க வேண்டும்.

இக்கூட்டத்தில் அம்மா பேரவை மாநிலத் துணைச் செயலாளர்கள் அரவிந்தன், டி.ஆர். சுரேஷ்குமார் மற்றும் பேரவை நிர்வாகிகள், திருச்சி மாநகர், புறநகர்ப் பகுதி நிர்வாகிகள் பலர் திரளாகக் கலந்துகொண்டனர்.

​

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0