தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

 0
தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

ஓய்வூதியர் சங்கங்களின் ஆலோசனைகளைப் பெறாமல் வெளியிடப்பட்டுள்ள அரசாணையைத் திருத்தங்களுடன் மீண்டும் வெளியிட வேண்டும், காப்பீட்டு பிரீமியம் தொகை உயர்வைக் கைவிட வேண்டும், காசில்லா மருத்துவச் சிகிச்சையைத் தடையின்றி உறுதிப்படுத்த வேண்டும் மாவட்ட அளவிலான குழு பரிந்துரை செய்யும் மருத்துவச் சிகிச்சைச் செலவு முழுவதையும் அரசு வழங்க வேண்டும். மாவட்டக் குறைதீர்க்கும் குழுவில் ஓய்வூதியர் சங்க நிர்வாகிகளை உறுப்பினர்களாகச் சேர்க்க வேண்டும். பேக்கேஜ் கட்டண முறையை முழு வெளிப்படைத்தன்மையுடன் அமல்படுத்த வேண்டும். மருத்துவமனைகள் ஓய்வூதியர்களிடம் முன்பணம் வசூலிப்பதைத் தடுக்க உரிய அறிவுறுத்தல்களை அரசு வழங்க வேண்டும். என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் செவ்வாய்க்கிழமை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்குச் சங்க மாவட்டத் தலைவர் சிராஜுதீன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் மதிவாணன் வரவேற்புரையாற்றினார். மாநிலப் பொருளாளர் எம்.வி. செந்தமிழ்ச்செல்வன் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தை விளக்கிச் சங்க நிர்வாகிகள் சுந்தர்ராஜன், ராஜப்பா, ராஜாராமன், கிளாரா மேரி, கலைவாணன், சுப்பிரமணியன், பால்ராஜ் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் பிரகாஷ், மாவட்டப் பொருளாளர் சிவசங்கரன் ஆகியோர் பேசினர். நிறைவாக, மாவட்டத் துணைத் தலைவர் குருநாதன் நன்றி கூறினார். இதில் ஏராளமான ஓய்வூதியர்கள் கலந்துகொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0