மின் கணக்கீடு பணியை தனியாரிடம் ஒப்படைப்பதை கைவிட வலியுறுத்தி டி.என். இ.பி எம்ப்ளாயீஸ்பெடரேஷன் ஆர்ப்பாட்டம்
மின் கணக்கீடு செய்யும் பணியை தனியாரிடம் ஒப்படைப்பதை கைவிட வேண்டும்; காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். பிக்ஸ்டு டேர்ம் எம்ப்ளாய்மெண்ட் எனும் ஒப்பந்த முறையைப் புகுத்தி மின்வாரியத்தைத் தனியார் மயமாக்குவதைத் திரும்பப் பெற வேண்டும். ஸ்மார்ட் மீட்டர் திட்டம் என்ற பெயரில் மின் பகிர்மானத்தை முழுமையாகத் தனியார் மயமாக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டி.என்.இ.பி எம்ப்ளாயீஸ் பெடரேஷன் சார்பில் திருச்சி தென்னூரில் உள்ள மின்வாரிய தலைமைப் பொறியாளர் அலுவலகம் முன்பு திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பின் தலைவர் சத்யநாராயணன் தலைமை தாங்கினார். கோரிக்கைகளை விளக்கி அமைப்புச் செயலாளர் அன்புச்செல்வன், செயலாளர்கள் லால்குடி அன்பழகன், துறையூர் கண்ணன், நகரியம் எம்.எஸ். மணி, ஓய்வுபெற்றோர் சங்க பிரதிநிதி சம்பத்குமார் ஆகியோர் பேசினர். இதில் சங்க நிர்வாகிகள் செந்தில்குமார், கிருஷ்ணமூர்த்தி, சிவராஜ், ரவி உட்பட மின்வாரிய ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0