இளைய தலைமுறை பருவநிலை பாதுகாப்புக் குழு சார்பில் கிரீன் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி

 0
இளைய தலைமுறை பருவநிலை பாதுகாப்புக் குழு சார்பில்  கிரீன் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி

திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள வாக் பே, கேங்க் அவுட் பார்க்கில் இளைய தலைமுறை பருவநிலை பாதுகாப்புக் குழு சார்பில் கிரீன் தீபாவளி 2026 நிகழ்ச்சி நடைபெற்றது.

பாரம்பரியம், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் சமூக பங்கேற்பை இணைக்கும் முயற்சியாக இந்த நிகழ்ச்சி அமைந்தது.

நிகழ்வில் பட்டாசுகளின் வரலாறு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுடன், தமிழ்நாட்டின் சில பகுதிகளில் அறியப்படும் பாரம்பரிய கைவினைத் தீப்பொறி நடைமுறையான மாவளி செயல்விளக்கமும் நடத்தப்பட்டது.

மாவளி எவ்வாறு பாரம்பரியமாக தயாரிக்கப்பட்டது?, எவ்வாறு பயன்படுத்தப்பட்டது? என்பது குறித்து விளக்கினர்.

மேலும், இளைஞர்களை இயற்கையுடன் நேரடியாக இணைக்கும் நோக்கில் விதைப்பந்து தயாரிப்பு பயிலரங்கம் நடத்தப்பட்டது. மண்ணை கைகளால் தொட்டு விதைப்பந்துகள் தயாரித்த அனுபவம் இயற்கையோடு நெருக்கத்தை ஏற்படுத்தியது.

நிகழ்வில் பாரம்பரிய பருத்திப்பால் வரவேற்பு பானமாக வழங்கப்பட்டது. அதிரசம், முறுக்கு உள்ளிட்ட வீட்டில் தயாரிக்கப்பட்ட தீபாவளி பலகாரங்களும் பங்கேற்பாளர்களிடையே பகிரப்பட்டன. கிளைமேட் ஜஸ்டிஸ்,

கார்பன் டேக்ஸ், ஸ்கிரீன் டைம்

ரிடக்‌ஷன் உள்ளிட்ட கருத்துகள் இடம்பெற்ற பதாகைகளை தன்னார்வலர்கள் காட்சிப்படுத்தினர். பண்டிகை, நுகர்வு, சுற்றுச்சூழல் பொறுப்பு மற்றும் சமூக நீதி ஆகியவற்றின் தொடர்பைப் பற்றிய உரையாடல்களும் நடைபெற்றன.

இளைய தலைமுறை பருவநிலை பாதுகாப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் அசோக் ராஜா கூறுகையில், மாவளி போன்ற பாரம்பரிய அனுபவங்கள், உள்ளூர் உணவு, கைவினைச் செயல்பாடுகள் மற்றும் சமூக பங்கேற்பு மூலம் மகிழ்ச்சியையும் பொறுப்புணர்வையும் ஒன்றாக இணைக்க முடியும் என்பதைக் காட்டவே இந்த முயற்சி என்றார்.

இந்நிகழ்ச்சி வையா நேச்சுரல்ஸ், ரோட்டரி கிளப் ஆப் திருச்சி டைனமிக்,

மற்றும் ராக்போர்ட் ரீடர்ஸ் ஆகிய அமைப்புகளுடன் இணைந்து நடத்தப்பட்டது. வையா நேச்சுரல்ஸ் சார்பில் சூழல் நட்பு பரிசுத் தொகுப்புகளும் வழங்கப்பட்டன.

நிகழ்வில் வயா நேச்சுரல்ஸ் நிர்வாக இயக்குநர் பிரியம்வதா, ரோட்டரி டைனமிக் சார்பில் rotarian Er ராஜ்மோகன், ராக்போர்ட் ரீடர்ஸ் சார்பில் சுந்தர பாண்டியன், மேலும் ஜென்ஸ் கிளைமேட் ஆக்சன் அணியைச் சேர்ந்த ஜெய சூர்யா, அகிலேஷ், தவசி மற்றும் வெங்கடேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0