​நீட், டெட்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் எஸ்.டி.எப்.ஐ மாநிலக் கருத்தரங்கில் தீர்மானம்

 0
​நீட், டெட்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்  எஸ்.டி.எப்.ஐ மாநிலக் கருத்தரங்கில் தீர்மானம்

இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் தமிழ்நாடு மாநிலக் குழு சார்பில் ஞாயிறன்று திருச்சியில் மாநில அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு எஸ்டிஎப்ஐ அகில இந்தியத் துணைத் தலைவர் மற்றும் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் ச.மயில், எஸ்டிஎப்ஐ அகில இந்திய செயலாளர் அ.மாயவன்,  தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் பொதுச்செயலாளர் போ. அன்பழகன், ஆகியோர் தலைமை வகித்தனர்.தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சங்கர் வரவேற்றார். எஸ்.டி.எப்.ஐ அகில இந்திய செயற்குழு உறுப்பினர் மணிமேகலை துவக்க உரையாற்றினார்.கருத்தரங்கின் முதல் அமர்வில் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு காலத்தின் கட்டாயம் என்ற தலைப்பில் எல்ஐசி மகளிர் துணைக் குழு தென்மண்டல அமைப்பாளர் ஆர்.எஸ். செணபகம் பேசினார். இரண்டாவது அமர்வில் தமிழ்நாடு அரசின் ஓய்வூதிய திட்டம் என்ற தலைப்பில் டி.ஆர்.இ. யு தலைவர் ஆர்.இளங்கோவன் பேசினார். மூன்றாவது அமர்வில் தேசிய கல்விக் கொள்கை 2020 தாக்கங்களும், சவால்களும் என்ற தலைப்பில் பொது பள்ளிகளுக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு பேசினர். கருத்தரங்கில் ​நீட் மற்றும் டெட் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். தேசிய கல்வி கொள்கை - 2020ஐ கைவிட வேண்டும். நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். ஆசிரியர்களுக்கு உரிய காலமுறை ஊதியம் மற்றும் பணிப் பாதுகாப்பை வழங்க வேண்டும். என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன முடிவில் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயலாளர் ஜ.ஜெயராஜ் நன்றி கூறினார். கூட்டத்தில் தமிழ் ஆசிரியர் கழகத்தின் மாநில தலைவர் த.உதயசூரியன்,  தமிழ்நாடு அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பின் துணைப் பொதுச் செயலாளர் சிவ ஸ்ரீ ரமேஷ் மற்றும் மாநிலம் முழுவதிலிருந்து எஸ்.டி.எப்.ஐ இணைப்புச் சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0