கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு வருவாய்துறை கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில் கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலம் முறை ஊதியமான அடிப்படை ஊதியம் ரூ.15 ஆயிரத்து 700 வழங்க வேண்டும். 2003 க்கு முன்பு நியமனம் செய்யப்பட்ட கிராம உதவியாளர்களுக்கு சிறப்பு ஓய்வூதியம் வழங்க தனி அரசாணை வெளியிட்டது போல 1-4- 2003 க்கு பின்னர் பணி நியமனம் செய்யப்பட்ட கிராம உதவியாளர்களுக்கும் சிபிஎஸ், டி.ஏபி. எஸ் திட்டத்தில் ஓய்வூதியம் கிடைத்திட தனி அரசாணை வெளியிட வேண்டும். கருணை அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலர் பணி நியமனம் நடைபெற வேண்டும். 2299 கிராம உதவியாளர்கள் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய அளவில் மாவட்ட தலைநகரங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த வகையில் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் திருச்சி மாவட்ட செயலாளர் சத்யா தலைமை தாங்கினார்.மாவட்ட தலைவர் நடராஜ் வரவேற்றார். மாவட்ட துணை நிலை நிர்வாகிகள் மதியழகன், சிவகலை, சுபத்ரா, வசந்தி, ஜமுனா, ரெங்கசாமி, சிவசங்கர், செல்லதுரை, செல்வா, செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்க மாநில செயலாளர் எஸ். கார்த்திக் கோரிக்கைகளை விளக்கி பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வளன்அரசு, ஜிபிஎஸ் ஒழிப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் இன்பராஜ், மோட்டார் வாகன பராமரிப்பு துறை அலுவலர் சங்க நிர்வாகி அன்புரோஸ், தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்க பொருளாளர் கண்ணதாசன் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர். தமிழ்நாடு உதவி வணிகவரி மற்றும் துணை வணிகவரி அலுவலர் சங்க மாநிலத் தலைவர் லட்சுமணன் நிறைவுறையாற்றினார்.முடிவில் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் சதீஸ்வரன் நன்றி கூறினார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0