ஸ்ரீரங்கம் பகுதியில் அடிப்படை வசதிக்கோரி சி.ஐ.டி.யு. கண்டன ஆர்ப்பாட்டம்
ஸ்ரீரங்கம் பகுதியில் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தராத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் ஸ்ரீரங்கம் பகுதியில் பழுதடைந்துள்ள சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும். ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும் வாகனங்களுக்கு முறையான பார்க்கிங் வசதி செய்து தர வேண்டும், குடிநீர் மற்றும் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்ரீரங்கம் பகுதி சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சி.ஐ.டி.யு. சார்பில் புதன்கிழமை ஸ்ரீரங்கத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஸ்ரீரங்கம் பகுதி தலைவர் மகேஷ் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் மணிமாறன் சிறப்புரையாற்றினார்.இதில் சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் சுரேஷ், மாவட்ட செயலாளர் சந்திரன், மாவட்ட பொருளாளர் ஆண்டனிசுரேஷ், ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் சுப்பிரமணி, பகுதி பொருளாளர் ராமன் ஆகியோர் பேசினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். நிறைவாக ஸ்ரீரங்கம் பகுதி துணைத்தலைவர் தினேஷ் நன்றி கூறினார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0