திருச்சிராப்பள்ளி மாவட்ட போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற ஊழியர் நல சங்கம் மற்றும் வாசன் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்
திருச்சிராப்பள்ளி மாவட்ட போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற ஊழியர் நல சங்கம் மற்றும் வாசன் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை மற்றும் கண் அறுவை சிகிச்சை ஆலோசனை முகாம் செவ்வாய் அன்று அண்ணா நகரில் உள்ள வாசன் மருத்துவமனையில் நடத்தின. மருத்துவ முகாமிற்கு திருச்சிராப்பள்ளி மாவட்ட போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் சிவானந்தம் வரவேற்றார். முகாமை வாழ்த்தி சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், புறநகர் மாவட்ட செயலாளர் சம்பத், எஸ்சிடிசி ஓய்வு பெற்றோர் சங்க தலைவர் சண்முகம், பொருளாளர் ராமதாஸ் டி. என்.எஸ்.டி.சி முத்துகுமார், முத்து கருப்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு ஹீமோகுளோபின் அளவு, மஞ்சள் காமாலை
பரிசோதனை, கண் விழித்திரை பரிசோதனை, உள்விழி லென்ஸ், கண்ணீர் பை அடைப்பு, ரத்த சர்க்கரை அளவு, சிறுநீரக பரிசோதனை, இசிஜி, பி ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனை செய்து கொண்டனர். நிறைவாக சங்க பொருளாளர் கருனாநிதி நன்றி கூறினார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0