டாக்டர் ஜி.விஸ்வநாதன் மருத்துவமனையில் பெல்ஜியத்தில் இருந்தபடி ரோபோடிக் அறுவை சிகிச்சை செய்து சாதனை
டாக்டர் ஜி.விஸ்வநாதன் மருத்துவமனை சேர்மன் டாக்டர் கோவிந்த ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-டாக்டர் ஜி.விஸ்வநாதன் மருத்துவமனையில் முதன்முறையாக மகப்பேறியல் மற்றும் பொது (குடலிறக்க) அறுவை சிகிச்சை ஆகிய இரண்டிலும் உலகின் மிக நீண்ட கண்டம் கடந்த தொலைநிலை ரோபோடிக் அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக மேற்கொள்ளப் பட்டுள்ளது. பெல்ஜியம் மற்றும் இந்தியா இடையேயான 9,730கிலோ மீட்டர் தூரத்தை உள்ளடக்கி பெல்ஜியத்தின் ஜெனட் பல்கலைக்கழ கத்தின் ஆர்சி அகாடமி மற்றும் திருச்சி மாம்பழச்சாலையில் உள்ள டாக்டர் ஜி.விஸ்வநாதன் மருத்துவமனை ஆகியவற்றுக்கு இடையே இந்த இரண்டு நேரடி தொலைநிலை ரோபோடிக் அறுவை சிகிச்சைகள் நிகழ்த்தப்பட்டன. தற்போது இங்கிலாந்தில் ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி வரும் திருச்சியை சேர்ந்த டாக்டர் ரம்யா கலைச்செல்வன் பெல்ஜியத்தில் இருந்து மெட்பாட் டுமாய் ரோபோவை பயன்படுத்தி, இந்த இரண்டு அறுவை சிகிச்சைகளையும் தொலைதூரத்தில் இருந்தே வெற்றிகரமாக செய்து முடித்தார். பேராசிரியர் டாக்டர் கே.கோவிந்தராஜ் மற்றும் டாக்டர் ஆர்.முத்துராமன் ஆகியோர் தலைமையில் டாக்டர்கள் கிருஷ்ணசாமி கண்ணன், ஹேமமாலினி கோவிந்தராஜ், கருணாகரன் உள்பட பலர் கொண்ட மருத்துவக்குழுவின் ஆதரவோடு இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட் டன. இவ்வாறு அவர் கூறினார். அப்போது டாக்டர் ஜி.விஸ்வநாதன் மருத்துவமனை டாக்டர்கள் ஜவகர் நாகசுந்தரம், முத்துராமன் உள்பட பலர் உடன் இருந்தனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0