எய்ம்ஸ் வேலைவாய்ப்பு விண்ணப்பக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் விவசாய தொழிலாளர் சங்கம் மனு
திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் பாலாஜி தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ராஜேஷ் கண்ணா மாவட்ட வருவாய் அலுவலரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 22.6.2026 அன்று வெளியான நாளிதழ்களில், நாடு முழுவதும் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில், விண்ணப்பக் கட்டணமாக பட்டியலினத்தவர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு ரூ. 2,400-ம், இதர பிரிவினருக்கு ரூ. 3,000-ம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நம் நாட்டில் வேலைவாய்ப்பின்றி தவிக்கும் ஏழை, எளிய விவசாயத் தொழிலாளர் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள் கோடிக்கணக்கில் உள்ளனர். இவ்வளவு அதிகமான கட்டணத்தைச் செலுத்தி, எய்ம்ஸ் மருத்துவமனை காலிப் பணியிடங்களுக்கு அவர்கள் விண்ணப்பிப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்றாகும். எனவே, ஏழை மற்றும் எளிய விவசாயத் தொழிலாளர் குடும்பங்களைச் சேர்ந்த படித்த வேலையில்லா இளைஞர்களும் விண்ணப்பிக்கும் வகையில், எய்ம்ஸ் மருத்துவமனை பணியிடங்களுக்கான விண்ணப்பக் கட்டணத்தைக் குறைக்க மத்திய அரசுக்கு உரிய பரிந்துரை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். என அவர் அந்த மனுவில் கூறியிருந்தார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0