​சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் சென்னையில் வரும் 7-ந் தேதி காத்திருப்பு போராட்டம் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

 0
​சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில்   சென்னையில் வரும் 7-ந் தேதி காத்திருப்பு போராட்டம்   மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

திருச்சியில், தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் கே. பழனிச்சாமி தலைமை தாங்கினார். கோரிக்கைகளை விளக்கி மாநில பொருளாளர் ராமநாதன், மாநில செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் பேசினர். கூட்டத்தில், அரசாணை 41-ன் படி பணி ஓய்வு பெற்ற அங்கன்வாடி ஊழியர்களுக்கு, உயர்த்தப்பட்ட ஓய்வூதியம் மற்றும் நிலுவைத் தொகை தமிழ்நாட்டில் உள்ள எந்தவொரு மாவட்டத்திலும் இதுவரை வழங்கப்படவில்லை.இந்த நிலுவைத் தொகையை உடனே வழங்க வலியுறுத்தி, வரும் 7.7.2026 அன்று சென்னை தரமணியில் உள்ள ஐ.சி.டி.எஸ். இயக்குனர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்துவது. இப்போராட்டத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான ஓய்வூதியர்களைப் பங்கேற்கச் செய்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் அய்யங்காளை, சுப்பிரமணியன், பாண்டி, சத்தி, மாவட்ட நிர்வாகிகள் சுவாமிநாதன், ஜெயராஜ், சாவித்திரி மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் உட்பட மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக, மாவட்டத் தலைவர் எலிசபெத் ராணி வரவேற்றார். முடிவில், மாநில செயலாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.

What's Your Reaction?

Like Like 3
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0