ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 200 பேருக்கு புதிய ரேசன் கார்டுகள் அமைச்சர் ரமேஷ் வழங்கினார்

 0
ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில்  200 பேருக்கு புதிய ரேசன் கார்டுகள்   அமைச்சர் ரமேஷ் வழங்கினார்

திருச்சி மாநகரம், ஸ்ரீரங்கம் வட்டத்தில் பலர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய ரேசன் கார்டு கேட்டு விண்ணப்பித்திருந்தனர். மார்ச் மாதம் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் அவர்களுக்கு புதிய ரேசன் கார்டு வழங்கும் நடைமுறைகள் நிறுத்தி வைக்கப்பட்டன. தேர்தல் நடத்தை விதிகள் முடிந்து 2 மாதங்கள் ஆகியும் ரேசன் கார்டு வழங்கப்படவில்லை. இதையடுத்து தொகுதி எம்.எல்.ஏவும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான எஸ். ரமேஷிடம் அண்மையில் ஸ்ரீரங்கம் பகுதி பொதுமக்கள் சந்தித்து தங்களது விண்ணப்பத்தை பரிசீலித்து விரைந்து புதிய ரேசன் கார்டு வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர்.   இதையடுத்து அமைச்சரின் உத்தரவின் பேரில் ஸ்ரீரங்கம் வட்டத்தைச் சேர்ந்த புதிய ரேசன் கார்டு விண்ணப்பத்தாரர்களின் விண்ணப்பங்கள் பரீசீலிக்கப்பட்டு சுமார் 200 பேருக்கு ரேசன் கார்டு தயார் செய்யப்பட்டது. 

ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வியாழனன்று நடைபெற்ற நிகழ்வில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எஸ்.ரமேஷ், 200 பேருக்கு புதிய ரேசன் கார்டுகளை வழங்கினார்.

 இந்நிகழ்வில் ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் தமிழ்மணி, ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் செல்வகணேஷ், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் தமிழ்ச்செல்வி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0