திருச்சி மத்திய பேருந்து நிலையத்தை மீண்டும் முழுமையாக செயல்படுத்த வேண்டும் சி ஐ டி யு கோரிக்கை
சென்னை - மதுரை - கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பெருநகரங்களில் இரண்டுக்கும் மேற்பட்ட இடங்களிலிருந்து புறநகர் பேருந்துகள் இயக்கப்படுவதை போல், பஞ்சப்பூர் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் சில ரூட் புறநகர் பேருந்துகளை திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இயக்க வேண்டும், காவிரி பாலத்திலிருந்து கரூர் சாலை சிக்னல் வரையிலான பெரும் போக்குவரத்து நெரிசலை குறைத்திட, சத்திரத்திலிருந்து இயக்கப்படும் பெரம்பலூர் - அரியலூர் - கடலூர் பேருந்துகளை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இயக்க வேண்டும், திருச்சி மத்திய பேருந்து நிலைய வளாகத்தை பாழடைந்த பகுதியாக மாற்றிட தனியார் பெரு நிறுவனங்கள் மால் - கட்டுவதற்காக வழிவகை செய்வதை தவிர்த்து திறந்த வெளி மத்திய பேருந்து நிலையத்தை பாதுகாக்க வேண்டும், வேதா நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்து மாநகராட்சியே நடத்திட வலியுறுத்தி சிஐடியு திருச்சி மாநகர் மாவட்டக்குழு சார்பில் திங்களன்று கலெக்டர் ஆபீஸ் அருகில் சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் தலைமையில் மனு கொடுக்கும் இயக்கம் நடைபெற்றது. கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் செல்வி, மாவட்ட துணைத் தலைவர்கள் சந்திரன், சீனிவாசன், மாவட்ட பொருளாளர் மணிகண்டன், நிர்வாகிகள் கணேசன், சந்திரசேகர், வெற்றிவேல், அந்தோணி சுரேஷ் ஆகியோர் பேசினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.பின்னர் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. முன்னதாக திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் பிரச்சாரம் செய்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கினர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0