ஸ்ரீரங்கம் சிங்கர்கோயிலில் விஷ்ணுபதி புண்ணியகால சிறப்பு வழிபாடு
விஷ்ணுபதி புண்ணியகால நாளாகிய இன்று ஸ்ரீரங்கம் காட்டழகியசிங்கர் கோயிலில் திரளான பக்தர்கள் பூக்களுடன் வந்து வழிபாடு நடத்தினர்.
உத்திராயண புண்யகாலம், தட்சிணாயன புண்யகாலம் என்பது போல் விஷ்ணுபதி புண்யகாலம் என்று ஒன்றும் இருக்கிறது. இது பரவலாக அறியப்படாத ஒன்று என்றே சொல்லலாம். ஒரு வருடத்தில், வைகாசி 1, ஆவணி 1, கார்த்திகை1 மற்றும் மாசி 1 இந்த நாலு நாட்களும் விஷ்ணுபதி புண்ணிய கால நாட்களாக சொல்லப்பட்டிருக்கின்றன. இந்த நாளில் அதிகாலை 1.30 மணியிலிருந்து காலை 10 மணிக்குள் யார் பெருமாள் கோயிலுக்குச் சென்று மஹாவிஷ்ணுவை வழிபாடு செய்கிறார்களோ அவர்களுடைய வாழ்க்கையில் மிகப் பெரிய முன்னேற்றம் ஏற்படும் என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. இதை நாம் சரிவர உபயோகப்படுத்தி ஸ்ரீ மஹாவிஷ்ணுவை வழிபாடு செய்தால் பொருளாதாரம் மேம்படும், வாழ்வில் ஏற்பட்டிருக்கும் இன்னல்கள் தீரும்என்ற சாஸ்திரத்தை ஆந்திரா மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த சில முன்னணி ஜோதிடர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். இதன் அடிப்படையில் கைகளில் ஏதாவது ஒரு வகையைச் சேர்ந்த 27 பூக்களை எடுத்துச் செல்ல வேண்டும். அந்த பூக்களோடு பெருமாளின் கருவறையை கொடிமரத்தோடு சேர்த்து 27முறை வலம் வர வேண்டும். அந்த எண்ணிக்கை தவறாமல் இருப்பதற்காகதான் 27 மலராக ஒவ்வொரு சுற்று முடிந்ததும் ஒரு பூவை கொடிமரத்தின் முன்னர் போட வேண்டும். பிரதட்சணம் முடித்து பெருமாளுக்கு துளசி மாலை சமர்ப்பித்து, அர்ச்சனை செய்யலாம். இந்த ஆலோனைப்படி இன்று ஆவணி மாதப்பிறப்பு என்பதால் அதிகாலை முதல் முற்பகல் வரை, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபக்கோவிலான காட்டழகிய சிங்கர் கோயிலில் ஜோதிடர்கள் கூறியபடி வலம் வந்து வழிபாடுகள் நடத்தினர்.
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0