திருச்சி உறையூர் சாலைரோட்டில் கதிர் மருத்துவமனை புதிய பல்நோக்கு சிறப்பு பிரிவு தொடக்க விழா

 0
திருச்சி உறையூர் சாலைரோட்டில்  கதிர் மருத்துவமனை புதிய பல்நோக்கு சிறப்பு பிரிவு தொடக்க விழா

திருச்சி உறையூர் சாலைரோட்டில் அமைந்துள்ள கதிர் மருத்துவமனை மிக சிறந்த சிகிச்சையை வழங்கும் நோக்கில், தற்போது அதிநவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. கதிர் மருத்துவமனையின் புதிய பல்நோக்கு சிறப்பு பிரிவு தொடக்க விழா நேற்று காலை நடைபெற்றது. மருத்துவமனையை அவனிதா பரத்குமார் திறந்து வைத்தார். விழாவில் ராஜேந்திரன் மற்றும் வைஜெயந்திமாலா, வீரபாண்டியன் மற்றும் டி.லலிதா, நிர்வாக இயக்குனர் டாக்டர் பரத்குமார், டாக்டர்கள் கதிரொலி, ராஜராஜன் மற்றும் ஜெகன், அவனிதா, சூர்யா, தேவதாஸ், ரமேஷ்குமார் மற்றும் கதிர் மருத்துவமனை டாக்டர்கள் குழுவினர், ஊழியர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர். கதிர் மருத்துவமனையில் 24 மணிநேர விபத்து மற்றும் அவசர சிகிச்சை, உலக தரம் வாய்ந்த 13 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு, சி.சி.யு., டயாலிசிஸ், என்.ஐ.சி.யு, 96 ஸ்லைஸ் சிடி, 3 மாடுலர் ஆபரேஷன் தியேட்டர், மாடுலர் லேபர் ரூம், எண்டோஸ்கோப்பி தொகுப்பு, ஐசிஜி தொழில்நுட்பத்துடன்கூடிய 3டி லேப், மேம்பட்ட ஐவிஎப், மேம்பட்ட இன்டர்வென்ஷனல் கேத்லேப் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0