மன மகிழ் மன்றங்களை தடை செய்ய வேண்டும்
தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை, திருச்சியில் சங்கத் தலைவர் பெரியசாமி முன்னாள் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் சங்கத்தின் பொதுச் செயலாளர் தனசேகரன், பொருளாளர் கோவிந்தராஜ், மாநிலச் செயலாளர்கள் செல்வம், மணிகண்டன், இளங்கோ, துணைத் தலைவர்கள் பாலச்சந்தர், நெல்லை நெப்போலியன், குமரன், ஹரி கிருஷ்ணன் திருச்சி பவளக்கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம்,
ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும். காலிப் பாட்டில்கள் திரும்பப்பெறும் திட்டத்திற்கு புதிய பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும். மது கூடங்களை அரசை ஏற்று நடத்த வேண்டும். எஃப் எல் 2 மற்றும் மனமகிழ் மன்றங்களை தடை செய்ய வேண்டும்
மூடப்பட்ட 177 டாஸ்மாக் கடை பணியாளர்களை அரசின் பிற துறைகளில் உள்ள காலி பணியிடங்களில் பணிபுரிய உத்தரவு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0