கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

 0
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு சட்டமன்றத்தில் 2026 ஜனவரி 24-ல், ஓய்வூதியம் உயர்வு, ஒட்டுமொத்த தொகை உயர்வு, குடும்ப ஓய்வூதியம், ஈம சடங்கு தொகை இவைகளை அறிவித்து அரசாணை வெளியிடப்பட்ட நாள் முதல் நடைமுறைப்படுத்த வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் எலிசபெத்ராணி தலைமை வகித்தார். மாவட்ட இணை செயலாளர் சுப்பிரமணியன் வரவேற்றார். தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாநில பொருளாளர் செந்தமிழ் செல்வன் துவக்க உரையாற்றினார். கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட பொருளாளர் சாமிநாதன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பால்பாண்டி ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தை வாழ்த்தி தோழமை சங்க நிர்வாகிகள் சின்னசாமி, அல்போன்சா, ஜீவானந்தம், ரெங்கராஜன், பெரியசாமி, சந்திரா ஆகியோர் பேசினர் சங்க மாநில செயலாளர் ராஜேந்திரன் . முடிவில் மாவட்ட பொருளாளர் ஜெயராஜ் நன்றி கூறினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0