​போக்குவரத்து கழக ஓய்வூதியர் நல அமைப்பினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ​

 0
​போக்குவரத்து கழக ஓய்வூதியர் நல அமைப்பினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ​

ஓய்வு பெற்ற ஊழியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

​கடந்த 2015 நவம்பர் மாதம் முதல் வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி நிலுவைத்தொகை ரூ.3,637 கோடியை விரைந்து வழங்க வேண்டும்.

​ கடந்த 1.4.2003-க்கு பிறகு பணியில் சேர்ந்த தொழிலாளர்களையும் பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் சேர்க்க வேண்டும்.

​கல்வித் தகுதியின் அடிப்படையில், மறைந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

​கடந்த 2026 ஏப்ரல் முதல் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய ஓய்வுகால பணப் பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி

அரசு போக்குவரத்து மற்றும் விரைவு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக திருச்சி மண்டல தலைமை அலுவலகம் முன்பு வியாழனன்று பெருந்திரள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் 

​நடந்தது.

 ஆர்ப்பாட்டத்திற்கு அரசு போக்குவரத்து ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். சம்மேளன துணைப் பொதுச் செயலாளர் வாசுதேவன், சி.ஐ.டி.யு. மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், சங்கச் செயலாளர்கள் சண்முகம், சிவானந்தம், தலைவர் சிங்கராயர் மற்றும் எஸ்.இ.டி.சி. மாநிலத் தலைவர் அருள்தாஸ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

​ஆர்ப்பாட்டத்தின் நிறைவாக, அரசு போக்குவரத்து ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் பொருளாளர் கருணாநிதி நன்றி கூறினார். இதில் திரளான ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக ஊழியர்கள் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0